அடுத்த ஆண்டுமுதல் கர்நாடகாவிலுள்ள மத்திய பல்கலை.யில் புதிய படிப்புகள்!!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படிப்பு, வரலாறு, பத்திரிகையியல், பழங்குடியின படிப்புகள், இசை, ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய துறைகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய படிப்புகள் தொடங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சென்டிரல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எச். மகேஸ்வரய்யா கூறியதாவது:

அடுத்த ஆண்டுமுதல் கர்நாடகாவிலுள்ள மத்திய பல்கலை.யில் புதிய படிப்புகள்!!

இந்தப் பல்கலை.யில் புதிதாக 20 துறைகள் தொடங்க அனுமதி தரப்பட்டது. தற்போது 16 துறைகள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 4 துறைகள் அடுத்த கல்வியாண்டுக்குள் தொடங்கப்படும்.

புதிய படிப்புகள் தொடங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தப் படிப்புள் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும். மேலும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் படிப்புகளைத் தொடங்குவதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. புதியப் படிப்புகளுக்காக ரூ.67 லட்சத்தையும் மானியக் குழு ஒதுக்கியுள்ளது.

கரும்பு தொழில்நுட்பம், உணவுப் பதனிடுதல் பிரிவில் புதிய படிப்புகள் தொடங்கவும், தொழில் படிப்புகள் தொடங்கவும் ரூ.1.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
The Central University of Karnataka (CUK) proposes to start new departments in defence studies, history, journalism, folklorist and tribal studies, music and fine arts from the next academic year, based on availability of funds. Addressing a press conference in Kalaburagi city on Saturday, Vice-Chancellor H.M. Maheshwaraiah said the UGC had sanctioned 20 departments and 16 of them were functioning. The new departments proposed would shore up academic activities of the university further.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia