புதுடெல்லி: சென்ட்ரல் டூல் ரூம் அண்ட் டிரெய்னிங் சென்டர் (சிடிடிசி) கல்வி நிறுவனத்தில் பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் சிடிடிசி மையம் அமைந்துள்ளது. இந்த படிப்புகள் 2016-ம் ஆண்டு ஜூலையில் தொடங்குகின்றன. டூல் அண்ட் டை மேக்கிங் தொடர்பான டிப்ளமோ படிப்புகளாகும் இது.
இந்தப் படிப்பில் சேர மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு ஈடான படிப்புகளை படித்திருக்கவேண்டும். 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பவர்களும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பம் செய்யவேண்டும். வயது 15 முதல் 18-க்குள் இருக்கவேண்டும்.
ஆன்-லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் என்றால் இணையதளத்துக்குச் சென்றும், ஆப்-லைன் என்றால் சிடிடிசி மைச்சின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். படிப்பில் சேர எழுத்துத் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
ஏப்ரல் 16-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24-ல் நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.cttc.gov.in/report/2016/dtdm-2016.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

