மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

Posted By:

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவவர்களுக்கு இந்தப் பள்ளிகளில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். அதிக சம்பளம், நிரந்தர வேலை என்பதால் இந்தத் தேர்வுகளை அதிகம் பேர் எழுதி வருகின்றனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-இல் காலை 9.30 முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வறை அனுமதிச் சீட்டை ஜனவரி 25-ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி என்ன...: 5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக எவ்வளவு செலுத்தவேண்டும்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுத விரும்புவோர் ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்தினால் போதுமானது.

மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia