மத்திய மருத்துவ நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு...!

Posted By:

சென்னை : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்களில் ஒன்று வி.எம்.எம்.சி சப்தர்ஜங் மருத்துவமனை, தற்போது இந்த மருத்துவமனையில் ஜூனியர் ரெசிடன்ட் பணிகளுக்கு இள நிலை மருத்துவம் படித்தவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு 174 பணியிடங்களும், டென்டல் சர்ஜரி படித்தவர்களுக்கு 7 பணிகளும், மேக்சில்லோபேசியல் சர்ஜரி பணிக்கு 5 இடங்களும் உள்ளன.

மத்திய மருத்துவ நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு...!

கல்வித்தகுதி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

கட்டணம்

பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500ம், ஓபிசி பிரிவினர் ரூ. 250ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட் மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை சுய சான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு 02.06,2017ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.vmmcsjh.nic.in என்ற இணையதள முகவரியை சென்றுப் பார்க்கவும்.

English summary
186 job opportunities have been announced for MBS students at Central Medical Institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia