வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்கலாம் வாங்க! மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல லட்சம் மக்கள் வேலையிழந்து அன்றாடத் தேவைகளுக்குத் தவித்து வரும் இச்சூழ்நிலையில், மத்திய அரசு அதிரடியான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 
வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்கலாம் வாங்க! மத்திய அரசு அறிவிப்பு!!

அதில், மத்திய அரசின் ரேஷன் திட்டத்திற்கு லோகோ தயாரித்து கொடுப்பவருக்கு ரூ.50,000 பரிசு வழங்க இருப்பதாகவும், திறமை வாய்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுக் கடந்த ஒரு ஆண்டு காலமாக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, பல லட்சம் வேலை இழந்து மனதளவிலும், பொருளாதார அளவிலும் தவித்து வருகின்றனர்.

அரசு சார்பில் நிதி உதவி

அரசு சார்பில் நிதி உதவி

அவ்வாறு பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவ்வப்போது அரசுத் தரப்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் 2000, 4000 ரூபாய் அவ்வப்போது நிவாரணமாக இருந்தாலும் அது முழுமையான தீர்வாக அமைவதில்லை.

மத்திய அரசு அதிரடி
 

மத்திய அரசு அதிரடி

இந்த நிலையில், மத்திய அரசுத் தரப்பிலிருந்து மக்களுக்கு ஒரு ஹேப்பியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பணம் சம்பாதிக்க மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ரூ.50,000 பணம் சம்பாதிக்க மத்திய அரசு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன்

ஒரே நாடு ஒரே ரேஷன்

அதில், மத்திய அரசின் புதிய திட்டமான ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தின் சார்பாக அறிவிப்பு ஒன்றை அரசு தனது myGov.in எனும் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நீங்களும் விண்ணப்பிக்கலாம்

நீங்களும் விண்ணப்பிக்கலாம்

அந்த அறிவிப்பின் படி, ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்திற்கான லோகோ வடிவமைப்பதற்கான போட்டியை அரசு அறிவித்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் வரும் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திறமை உள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை

ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை

மத்திய அரசின் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு வெல்பவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை மற்றும் போட்டியின் இ- சான்றிதழ் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மூன்று போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளும், இ- சான்றிதழும் வழங்கப்படும்.

வயது வரம்பு

வயது வரம்பு

இந்தப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எந்த வயதினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். லோகோ JPEG, BMP அல்லது TIFF வகைகளில் 600 dpi ரிசொலுசனுடன் இருக்க வேண்டும். லோகோவை பற்றிய தகவல்கள் 100 வார்த்தைகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்க வேண்டும்.

பதிவு செய்யும் முறை

பதிவு செய்யும் முறை

விண்ணப்பதாரர் myGov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இதற்காகப் பதிவு செய்யவேண்டும். வரும் மே 31ம் தேதிக்குள் வரும் விண்ணப்பங்கள் மற்றும் லோகோ மற்றும் ஏற்றுக் கொள்ளப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central govt is giving a chance to earn Rs.50,000 prize competition
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X