பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..!

Posted By:

சென்னை : பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆதார் விபரங்களை வெளியிடுவதை ஆதார் சட்டம் தடைசெய்கிறது. அதனால் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கடந்த மார்ச் 10ந் தேதி பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) ஒரு கடிதம் எழுதியது. மானியக்குழு அதில்
பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.

பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் அவர்களுடைய இணையதளத்தில் வெளியிடுமாறு பல்கலைக் கழக மானியக்குழு கேட்டுக் கொண்டது.

பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..!

இதற்கு பி.எச்.டி. படிக்கும் மாணவர்களிடையே எதிர்ப்பு எழும்பியது. அவர்கள் தங்களுடைய விபரங்களை இணையதளத்தில் வெளியிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது எனவே பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதை மத்திய அரசு தடைசெய்துள்ளது.

மத்திய அரசு தடைசெய்து உள்ளதால் பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் ஜே.எஸ். சந்து இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆதார் வெளியிடுவதை ஆதார் சட்டம் தடை செய்கிறது எனவே ஆராய்ச்சி மாணவர்களின் ஆதார் விபரங்களை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட வேண்டாம் என்று
பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் ஜே.எஸ். சந்து மத்திய அரசின் உத்தரவின் படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

English summary
The Central Government has canceled the order to release the Aadhaar number of students to the PhD program.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia