அண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனமாக தேர்வாகியுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தித்திற்கு, அந்தந்த திட்டத்திற்கான முழுத் தொகையையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என அப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்கள் பிரதம

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனமாக தேர்வாகியுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தித்திற்கு, அந்தந்த திட்டத்திற்கான முழுத் தொகையையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என அப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, முந்தைய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக (ஏயுடி - கோவை) துணைவேந்தராக செயல்பட்ட கிருஷ்ணசாமி கருணாகரன் ஆகியோா் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசிற்கு உட்பட்ட மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் தோ்வு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

அவ்வாறு இந்த மேம்பட்ட அந்தஸ்தைப் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கை, நிதி கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை, புதிய படிப்புகள், பாடத் திட்டங்களை அறிமுகம் செய்தல், கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் என அனைத்திலும் முழுச் சுதந்திரம் கிடைப்பதோடு, ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதியுதவியும் வழங்கப்படும்.

இருப்பினும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியுதவியில் குறிப்பிட்ட பங்களிப்பை மாநில அரசும் ஏற்க வேண்டும். இதை ஏற்பதாக மாநில அரசு ஒப்புதல் அளித்த பின்புதான், இந்த சிறப்பு அந்தஸ்து உரிமை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் முந்தைய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக (ஏயுடி - கோவை) துணைவேந்தராக இருந்த கிருஷ்ணசாமி கருணாகரன ஆகியோர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேம்பட்ட கல்வி நிறுவனமாக தேர்வாகியுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தித்திற்கு வழங்கப்படும் ரூ.1000 கோடி நிதியுதவி முழுவதையும் மத்திய அரசே ஏற்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Government must pay the full amount to Anna University: Former Vice Chancellor
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+