மத்திய அரசு துறை.... மருத்துவ சேவைப் பணிகளுக்கு.... 710 காலியிடங்கள்!

Posted By:

சென்னை : யூபிஎஸ்சி எனப்படும் ம்த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவ சேவைப் பணிகளுக்கு 710 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 19-05-2017ந் தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுத்துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரிகள் தரத்திலான பணியிடங்களை நிரப்பி வரும் இந்த அமைப்பு தற்போது மருத்துவ அதிகாரி அளவிலான மருத்துவ சேவைப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. ரெயில்வே துறையில் அசிஸ்டன்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 450 இடங்கள் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸ் பிரிவில் 216 பணியிடங்கள் உள்பட 710 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.

ஒருங்கிணைந்த மருத்துவ சேவை பணிகள் தேர்வு மூலம் இந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசு துறை.... மருத்துவ சேவைப் பணிகளுக்கு....  710 காலியிடங்கள்!

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01/08/2017ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

பொதும் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், எஸ்சிஎஸ்டி பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுத் தகுதியும் உள்ளவர்கள் இயைதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 19/05/2017ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும் பார்ட்-1 விண்ணப்பம் சமர்ப்பித்துவிட்டு கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பார்ட்-1 விண்ணப்பப் படிவத்தில் அவசியமான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் அவற்றை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இதற்கான தேர்வு 13/08/2017 அன்று நடைபெற உள்ளது.

மேலும் தகவல் அறிந்து கொள்ள www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Union Public Service Commission has announced that 710 vacancies will be filled in for medical services. Eligible candidates can apply on 19-05-2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia