சுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் !!!

Posted By:

இந்திய சுதந்திரதின கொண்டாட்டங்களும் முறைகளும் இந்தியர்களான ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் . இந்தியாவின் பாரம்பரியம் போராட்ட குணங்களும் இந்தியர்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும் .

நாட்டின் முதல் சுதந்திரதினம் மற்றும் பொதுவான சுதந்திர கொண்டாட்டங்கள்

சுதந்திர ஸ்லோகங்கள் :

இந்தியா செய் அல்லது செத்துமடியில் எனும் கோஷத்தில் சுதந்திரதாக உச்சியை எட்டியது என்று கூறப்படுகிறது . இந்தியாவில் இரத்ததை கொடு சுதந்திரம் தருகிறேன் என்னும் சுபாஷின் கோஷம் உயிர்நாடியை இருந்தது. இதனையும் நாம் அறியவேண்டும் .

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தமிழ் விடுதலைப்பாடல் அத்துடன் அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினிலே அச்சமில்லை என்ற கோசமும் மக்களை எழுச்சியூட்டிய பாடல்கள் ஆகும் .
இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங் குழுவின் கோஷம் நாட்டுமக்களை கிளர்ச்சியடைய செய்தது .

சுதந்திரதின கொண்டாட்டம் :

1947 நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆக்ஸ்ட் மாதத்தில் 14இரவு,15 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மையமண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டமன்றம் கூடியது. இராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார் .சரியாக 12 மணி அளவில் சுதேச கிருபாளனி வந்தேமாதரம் பாடலை பாட இராஜேந்திர பிரசாத் தலைமை உறையாற்றினார்,பின் நேரு உறையாற்றினார் .

ஒவ்வொருவருடமும் சுதந்திரதினத்தின்போது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் கொடியேற்றுவது வழக்கமாகும் . இந்தியாவின் சிறப்பான சுதந்திரதின கொடியேற்றியபின் தேசியகீதம் பாடல் பாடப்பட்டு வானில் வண்ண வண்ண நிற வடிவங்களுடன் காத்தாடிகள் , பலுன்கள் பறக்கவிடப்பட்டு வந்தது . அத்துடன் நாட்டின் உயரிய படையான இந்திய இராணுவ பாராமிலிட்டிரியின் அணிவகுப்பு நிகழ்வு நடக்கும் பள்ளி மாணவ கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவதுண்டு .

சுதந்திரதின உரையாடலை செங்கோட்டையில் கொடியேற்றியப்பின் நாட்டின்பிரதமர் நிகழ்த்துவார்கள் நாட்டின் தலைநகரம் முழுவதும் காவல்த்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் . 21 குண்டுகள் முழங்கி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி கொண்டாடுவோம் இந்திய தேசிய சுதந்திரதினத்தை . பெருமிதத்துடன் கொண்டாடுவதுண்டு . இந்திய சுதந்திர தின கொண்டாட்டமுறையை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் . சுதந்திரம் தேசத்தின் முகவரிக்கு முக்கிய அடையாளம் ஆகும் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய சுதந்திரதின கொண்டாட்டங்கள் அதன் விவரங்களும்

சுதந்திரம் இந்தியாவின் இனியதொரு ஆரம்பம்

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது

English summary
here article tell about Indian Independence day celebrations

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia