புதுடெல்லி: காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் ஃபார் டிசைன் (சீட் 2015) தேர்வு முடிவுகள் மார்ச் 19-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
சீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் பெங்களூர் ஐஐஎஸ்சி, ஐஐடி பம்பாய், ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி கான்பூர், பல்வேறு இன்ஸ்டிடியூட்டுகளில் பிஎச்.டி. படிப்புகளில் டிசைன் பிரிவில் சேர முடியும். இந்தத் தேர்வை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் ஐஐடி பம்பாய் நடத்தியது.

இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்றன. இதன் முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது வெளியாகிறது.
முடிவுகளைப் பெற விரும்புவோர் http://www.gate.iitb.ac.in/ceed2016/ என் இணையதளத்தில் நுழைந்து CEED 2015 என்ற பகுதியைக் கிளிக் செய்யவேண்டும்.
முடிவுகள் தோன்றியதும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

