யூபிஎஸ்சி நடத்தும் இந்திய இராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

Posted By:

யூபிஎஸ்சி நடத்தும் இந்திய சிடிஎஸ் தேர்வுக்கான ரிசல்ட்கள் வெளிவந்துள்ளது. இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான மத்திய அரசின் தேர்வு ஆனையமான யூபிஎஸ்சியால் வருடத்தின் இருமுறை சிடிஎஸ் தேர்வு நடத்தப்படுகின்றது .

யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சிடிஎஸ் தேர்வானது 23 வயது வரை தேர்வு எழுதலாம். பட்டப்படிப்பை முடித்திருப்பவர்கள் இத்தேர்வை எழுதலாம். கம்பைண்டு டிபென்ஸ் தேர்வு இரண்டாவது தேர்வானது 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்ககளுக்கான தேர்வு ரிசல்ட்கள் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 2017இல் நடைபெற்ற சிடிஎஸ் 2 தேர்வுக்கான ரிசல்டினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் 2 தேர்வினை வெற்றிகரமாக முடித்து தேர்வு பெற்றவர்கள் ஐந்து நாள் யூபிஎஸ்சி நடத்தும் எஸ்எஸ்பி நேரடித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதிக மதிபெண்கள் பெறுபவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2017 நவம்பரில் நடைபெற்ற சிடிஎஸ் தேர்வில் மொத்தம் 8692 பேர் சிடிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று எஸ்எஸ்பி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்எஸ்பி நேரடி தேர்வு:

சிடிஎஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 2018 ஆம் ஆண்டில் அக்டோபரில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவார்கள். எஸ்எஸ்பி இண்டர்வியூவானது ஐந்து நாட்கள் நடைபெறும். ஐந்து நாட்கள் படம் பார்த்து பதிலளித்தல்,
குழு விவதம், உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் டெஸ்டினை வெல்ல வேண்டும். தொடர்ந்து தேர்வினை வென்றவர்கள் முப்படைகளின் பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள் .

எஸ்எஸ்பி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இண்டியன் மிலிட்டரி அகாடமி, டேராடுனில் பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.

இண்டியன் நேவக் அகாடமி பயிற்சிக்கு ஜூலை 2018க்குள் அழைக்கப்படுவார்கள்

ஏர்போர்ஸின் அகாடமி ஹைதிராபாத் டிரெயினிங் கோர்ஸில் பங்கேற்க ஆகஸ்ட் 2018க்குள் அழைக்கப்படுவார்கள்

ஆபிசர் டிரெயினிங் அகாடமிக்கு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சிக்கு அக்டோபர் 2018க்குள் அழைக்கப்படுவார்கள்
ஆபிசர் டிரெயினங் அகாடமிக்கு பயிற்சிக்கு பெண்கள் அக்டோபர் 2018இல் அழைக்க்ப்படுவார்கள்

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கான  தேர்வு முடிவிகள் பெற இணைய இணைப்பை இங்கு  கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சியின் சிடிஎஎஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு

English summary
here article tells about CDS II Result Declared by UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia