எம்.டெக், படிக்க ஆசையா...!! சிசிஎம்டி தேர்வுக்கு பதிவு செய்ய ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க...!!

Posted By:

டெல்லி: எம்.டெக், எம்.பிளான் படிப்புகளில் சேர உதவு மத்திய கவுன்சிலிங் தேர்வுக்கு (சிசிஎம்டி) ஆன்-லைனில் பதிவு செய்யயலாம்.

சிசிஎம்டி தேர்வுக்கு பதிவு செய்தவதற்கான பணிகள் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிவிட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 12 ஆகும். நாடு முழுவதிலுமுள்ள என்ஐடி இன்ஸ்டிடியூட்டுகள், ஐஐஐடிஎம் குவாலியர் போன்ற இன்ஸ்டிடியூட்டுகளில் சேர்வதற்கு சிசிஎம்டி தேர்வு உதவுகிறது.

எம்.டெக், படிக்க ஆசையா...!! சிசிஎம்டி தேர்வுக்கு பதிவு செய்ய ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க...!!

ஆன்-லைன் மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. குவாலியர் ஐஐஐடிஎம், ஜபல்பூர் பிடிபிஎம் ஐஐஐடிஎம், லோங்கோவால் எஸ்எல்ஐஇடி, ராஞ்சி என்ஐஎஃப்எஃப்டி, விஜயவாடா எஸ்பிஏ, அலகாபாத் ஐஐஐடி, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், பிலாஸ்பூர் குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா, ஷிப்பூர் ஐஐஇஎஸ்டி இன்ஸ்டிடியூட்டுகளில் இந்தப் படிப்புகளில் சேரலாம்.

இந்த ஆண்டில் சிசிஎம்டி தேர்வை சூரத்கல் என்ஐடி நடத்துகிறது. இந்தத் தேர்வை எழுத கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்-லைனில் விண்ணப்பிக்க http://ccmt.nic.in/webinfo/Public/Home.aspx என் இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 12 ஆகும்.

English summary
The registrations for CCMT 2016 (Centralised Counselling for M.Tech / M.Plan Admission) have started from April 11. Aspirants who are interested can register till May 12, 2016. Application fee for the same should be paid online or through SBI e-challan. Centralised counselling for M.Tech. / M.Arch./ M.Plan admission (CCMT) 2016 is an on-line admission process, conducted to offer admissions to all National Institutes of Technologies (NITs) and several other centrally funded institutes such as IIITM Gwalior, PDPM IIITDM Jabalpur, SLIET Longowal, NIFFT Ranchi, SPA Vijayawada, IIIT Allahabad, Central University of Rajasthan, Institute of Technology, Guru Ghasidas Vishwavidyalaya, Bilaspur, and IIEST Shibpur.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia