சிமெண்ட் கார்ப்பொரேஷனில் வேலை காத்திருக்கு...!

Posted By:

சென்னை: இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(சிசிஐ)ஃ ஜூனியர் ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிமெண்ட் கார்ப்பொரேஷனில் வேலை காத்திருக்கு...!

இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷன் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமாகும். டெல்லியில்1965-ல் நிறுவப்பட்டது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு வகையான சிமெண்ட் வகைகளை இது உற்பத்தி செய்து வருகிறது.

ஜூனியர் ஆபீஸர் பணியிடங்களில் (கிரேட்2) 2 காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் அக்கவுன்ட்ஸ், ஃபைனான்சியல், காஸ்ட் அக்கவுன்ட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் 2 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை the HOD (P&A), Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, P.O. Bokajan Cement Factory, Dist. Karbi Anglong (Assam) Pin- 782490 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

English summary
Cement Corporation of India Limited (CCI) invited applications for recruitment to the post of Jr. Officer (A/cs), Gr. II. The candidates eligible for the post can apply through prescribed format on or before 29 January 2016. Age Limit: Between 18-30 years. (Age Relaxation for SC/ST/OBC/PWD/Women, as per Govt. Rules) How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to the HOD (P&A), Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, P.O. Bokajan Cement Factory, Dist. Karbi Anglong (Assam) Pin- 782490.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia