6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்!

Posted By:

டெல்லி : மத்திய கல்வி வாரியம் இந்த கல்வியாண்டில் (2017 - 2018) 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முறையில் புதுமையை புகுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் தேர்வுகள் மற்றும் அறிக்கை அட்டை, அனைத்து பள்ளிகளிலும கற்பித்தல் தரம் மற்றும் மதிப்பீடு உயர்த்தல், ஆகியவற்றில் சீரான புதிய முறைகளை கையாள உள்ளதாக அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ பாடத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு வருகின்ற கல்வியாண்டில் (2017-2018) சீரான மதிப்பீட்டு செயல் முறையின் கீழ் புதிய தேர்வு முறை மற்றும் ரிப்போர்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய பாடத் திட்டம்

வருகின்ற கல்வியாண்டில் (2017-2018) 10ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை சி.பி.எஸ்.இ கொண்டுவந்துள்ளது. சி.பி.எஸ்.இ மர்ணவர்கள் மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பாடங்களை பயின்று வருகின்றனர். அடுத்தக் கல்வியாண்டில் இருந்து (2017-2018) ஆறாவதாக தொழில் கல்வி பாடம் ஒன்றினையும் சேர்த்துப் படிப்பார்கள் என சி.பி.எஸ்.இ தலைவர் ஆர்.கே. சதுர்வேதி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

மாற்றம்

அதனை மையமாக வைத்தே இப்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள தேர்வு முறை மற்றும் அறிக்கை அட்டை வழங்குவதில் மாற்றம் கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம். தரமான கல்வியை வழங்குதலும் கல்வியின் தரம் மேலும் உயர்த்தப்படுவதற்காகவும் ஆகும்.

ஒரே சீரான கல்வி முறை

1962ம் வருடத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 309 ஆகும் ஆனால் தற்போது 18,688க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. ஒரே சீரான கல்விமுறை புதிதாக கொண்டுவருவதன் நோக்கம் மாணவர்கள் எளிதாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் புதிய பள்ளிகளுக்கு ஏற்படும் சிரமத்தினைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

3 அம்ச தர அளவு

6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக், பாட அடிப்படையில் அரையாண்டு மற்றும் முழுஆண்டு மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதற்கான ஸ்பேஸ்கள் ஆகியவைகள் உள்ளன. மேலும் மாணவர்களின் மதிப்பெண்கள் 3 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும். கிரோடு சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. 9ம் வகுப்பு மாணவர்களின் புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக் மற்றும் வருடாந்திர தேர்வு உள்ளடக்கியவைகள் காணப்படும். மேலும் ஒற்றை வருடாந்திர கால மதிப்பெண்கள் அறிக்கை அட்டையில் காணப்படும். மாணவர்களின் மதிப்பெண்கள் 5 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும்.

அசஸ்மென்ட்

தொடர்ச்சியான விரிவான மதிப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். அதில் நான்கு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் காணப்படுகிறது. ஒவ்வொரு டேம்முக்கும் இரண்டு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் இருக்கும். மேலும் 60% பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வு இருக்கும். 40% பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் அடிப்படையில் புராஜெக்ட்டுகள் இருக்கும். இவை பள்ளியில் வைத்து ஆசிரியர் முன் செய்யப்படும் புராஜெக்ட்டுகளாக இருக்கும்.

வெயிட்டேஜ் உயர்வு

புதிய கல்விமுறைத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். மேலும் புதிய கல்வித்திட்டத்தில் பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வுக்கான வெயிட்டேஜ் 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேம் தேர்வுகளும் 100 மதிப்பெண்களை உள்ளடக்கி வரும். தேர்வில் 80 மார்க், பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டிற்கு ஒவ்வொரு டேம்முக்கும் 10 மார்க் மற்றும் நோட் புக் சமர்ப்பிப்பதற்கு 10 மார்க்குகளும் வழங்கப்படுகின்றன.

எளிதாக இருக்கும்

6ம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு 2 டேம் தேர்வுகள் நடைபெறும். முதல் டேம் தேர்வு அதாவது அரையாண்டுத் தேர்வு வரை அனைத்துப் பாடத்திட்டங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் ஆண்டுத் தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வில் உள்ள பாடங்களைக் காட்டிலும் ஆண்டுத் தேர்விற்கு 10% அதிகரித்துக் காணப்படும். ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 20% அதிகரித்துக் காணப்படும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30% அதிகரித்துக் காணப்படும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பாடத்திட்டத்தினை அதிகரித்து வருவது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும். மேலும் அவர்கள் 9ம் வகுப்பு வரும் போது முழுப் பாடத்திட்டங்களையும் படிப்பது அவர்களுக்கு எளிதாக அமையும் என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

English summary
The new format is a "gradual movement towards quality education through standardization of teaching, assessment, examination and report card,"says CBSE board chairman.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia