டிசம்பரில் நடந்த நெட் தேர்வுகள் வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!!

Posted By:

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கடந்த டிசம்பர்மாதம் நடத்திய "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வை எழுதியவர்கள் தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில்சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலைஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன்,டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. வாரியம் சார்பில்நடத்தப்பட்டு வருகிறது.

டிசம்பரில் நடந்த நெட் தேர்வுகள் வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!!

தற்போது டிசம்பர்ள் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல்(ஏப்.12) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12-ம் தேதி கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

English summary
Results of the UGC National Eligibility Test (NET) December 2015 hasbeen declared by the Central Board of Secondary Education (CBSE). Candidates who have appeared for the exam can view the results from the official website. Follow the below steps to check the results Go to the official website Thereafter click on the link, 'UGC NET DEC 2015 Result' Enter your register number and date of birth After submitting the same, the results will get displayed on the screen Candidates should take a print-out for future reference.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia