மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்!!

Posted By:

கௌஹாத்தி: மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்கை வழங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் பல மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு கவுன்சிலிங்க வழங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்!!

மேலும் அவர்களுக்காக கட்டணமில்லாத தொலைபேசி சேவையையும் சிபிஎஸ்இ வழங்கி வருகிறது.1800 11 8004 என்ற டோல்ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டு மாணவர்கள் தங்களது பிரச்னைகளைச் சொல்லலாம். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த தொலைபேசிச் சேவை இருக்கும்.

ஏப்ரல் 22-ம் தேதி வரை இந்த தொலைபேசிச் சேவையை வழங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் cecbse@gmail.com மற்றும் sugandh.cbse@gmail.com என்ற இமெயிலுக்கும் பிரச்னைகளை மாணவர்கள் அனுப்பித் தீர்வைப் பெறலாம். மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங்கை சிபிஎஸ்இ நிர்வாகம் வழங்கி வருகிறது.

சிபிஎஸ்இ-யைச் சேர்ந்த 76 பள்ளி முதல்வர்கள், தேர்ச்சி பெற்ற கவுன்சிலர்கள் இந்த கவுன்சிலிங்கை வழங்கி வருகின்றனர்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்திலும் பெறலாம்.

English summary
The CBSE has urged its students to make the best use of its annual counselling session in view of the ongoing board examinations.Students can dial 1800 11 8004 (toll free) from any part of the country to seek solutions to their problems. The helpline is operational from 8 am to 10 pm from February 1 to April 22 on all days.For online counselling, students can mail their queries at counselling.cecbsegmail.com and sugandh.cbsegmail.com, while information related to examinations and exam stress is provided at the website www.cbse.nic.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia