சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கான அனுமதி தனியார் பள்ளிகள் குதுகலம் !!!

Posted By:

தமிழக மெட்ரிக் பள்ளிகளில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாறுவதற்கான விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுகொள்ளப்பட்டன . தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது .

சிபிஎஸ்சி பாடத்திட்ட அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது .இதற்கு முன் சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு, கேட், ஜேஇஇ தேர்வுகளின் தாக்கத்தால் இதுவரை மறுக்கப்பட்டு வந்த சிபஎஸ்சி கல்விமுறை தற்பொழுது நீட் தேர்வுக்குப்பின் தமிழக அரசு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி முறையில் பாடம் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது . இதுவரை தமிழக அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன .

தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
ஆனால் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அதாவது சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 600 மட்டுமே இருக்கின்றது . ஆகவே இதுகுறித்து பல்வேறு பள்ளிகள் விண்ணப்பித்தும் எந்த அனுமதியும் பெறவில்லை . இன்னும் ஆயிரக்கனக்காண பள்ளிகள் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு முனவந்தது . அவற்றில் அரசியல் ஆதரவளர்களால் சிலர் எளிதாக அனுமதி பெற்றனர் . ஆனால் தற்பொழுது அனுமதி கேட்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுமதி வழங்க தமிழக அரசு தயராகவுள்ளது .

அரசு மாணவர்களின் நிலை :

சிபிஎஸ்சி பள்ளிகளிண் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் அதிகரிக்கவுள்ளது. ஆனால்
அரசு மாணவர்களின் கதியென்ன என்று நாம் யோசிக்க வேண்டும் . நீட் தேர்வையடுத்து தனியார் பள்ளிகள் விழித்துகொண்டது தங்களது மாணவர்களை தயார்படுத்த தனியார் பள்ளிகள் தயராகிவிட்டன . ஆனால் அரசு பள்ளிகளிள் பயிலும் மாணவர்களுக்கு அரசு பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்று இன்றைய அரசு நடக்கும் சூழலில் சற்று அச்சமயமாகத்தான்வுள்ளது.

கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் மேற்ப்பார்வையில் உருவாகும் பள்ளிப்பாடத்திட்டம் சிறப்பாக இருக்குமென்ற நம்பிக்கை இருக்கின்றது . ஆனால் அரசு அவர்க்கு எந்த அளவிற்கு முழு சுதந்திரம் கொடுக்கும் என்பது பாடப்புத்தகங்கள்
வெளிவந்தப்பின்தான் தெரியும்

சார்ந்த பதிவுகள்:

புதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் !! 

நீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறது

English summary
here article tell about getting CBSE syllabus permission for private schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia