விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்!

Posted By:

சென்னை : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்!

சிபிஎஸ்இ உத்தரவின் படி தங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து விபரங்களையும் அளிக்காத 2000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதனுடன் வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும் வரவு - செலவு அறிக்கை ஆகிய அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுடைய விபரங்களை பள்ளியின் இணையதளத்திலும், சிபிஎஸ்இ இணையதளத்திலும் அக்டோபர் 2016க்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், 2,000க்கும் அதிகமான பள்ளிகள் இன்னும் தங்கள் பள்ளிகளைப் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வில்லை. இதற்கான விளக்கத்தைக் கேட்டு சி.பி.எஸ்.இ அந்தந்த பள்ளி தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், ஒரு மாதத்துக்குள் இந்த விபரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் ஆணைப் பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும் உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளப்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

English summary
Over 2,000 schools have failed to comply with the mandatory disclosure order. The identified schools have been sent show cause notices.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia