டெல்லி: மே 31-ம் தேதி சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது, தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
இந்த ஆண்டில் 10-ம் வகுப்பில் 14,99,122 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 6,06,437 மாணவிகளும், 8,92,685 மாணவர்கலும் அடங்குவர்.
இதேபோல 12-ம் வகுப்பில் 4.46.641 மாணவிகளும் 6,21,259 மாணவர்களும் தேர்வை எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.
இணையதளத்தைத் தொடர்புகொண்ட பின்னர் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி போன்ற விவரங்களைக் கொடுத்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
