விரைவில் வெளியாகிறது ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட்டுகள்!!

Posted By:

சென்னை: சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் விரைவில் ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் -2016-ஐ வெளியிடவுள்ளது.

இந்தத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jeemain.nic.in -ல் வெளியிடப்படும்.

விரைவில் வெளியாகிறது ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட்டுகள்!!

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகள் உதவுகின்றன. இந்தத் தேர்வுகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி. ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வியைப் பயில முடியும். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மார்ச் 1-ம் தேதி வெளியாகவிருந்தன

ஆனால் தொழில்நுட்பக் காரணமாக அன்று வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜேஇஇ ஆப்லைன் தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும். மெயின் ஆன்-லைன் தேர்வுகள் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெறும்.

தேர்வு எழுத விரும்புவோர் இணையதளத்துக்குச் சென்று அப்ளிகேஷன் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

English summary
The Central Board of Secondary Education (CBSE) has made an announcement that the candidates waiting for their JEE Mains exams 2016 admit cards don’t need to wait and the JEE Mains admit cards 2016 will soon be released on the official website www.jeemain.nic.in.Earlier, it was informed that the JEE Mains admit cards will be released on March 1, 2016, but due to some technical issues JEE admit cards 2016 will be released soon.JEE Main offline examination will take place on April 3, 2016, while the JEE Mains online exam is set to take place on April 9-10, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia