மன அழுத்தத்திலிருந்து மாணவர்கள் விடுபட தேர்வுக்கு முந்தைய கவுன்சிலிங் திட்டம்!!

Posted By:

சென்னை: மன அழுத்தத்திலிருந்து மாணவர்கள் விடுபடுவதற்காக தேர்வுக்கு முந்தைய கவுன்சிலிங் திட்டம் சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வின்போது மனஅழுத்தத்தில் சிக்கித் தவிப்பதாக பல்வேறு புகார்ககள் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு வந்தன. இந்த நிலையில் மாணவர்களை அதிலிருந்து மீட்பதற்காக கடந்த 19 ஆண்டுகளாக தேர்வுக்கு முந்தைய கவுன்சிலிங்கை சிபிஎஸ்இ தற்போது தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு 19-வது ஆண்டாக அந்த கவுன்சிலிங் திட்டம் தொடங்கியுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.

மன அழுத்தத்திலிருந்து மாணவர்கள் விடுபட தேர்வுக்கு முந்தைய கவுன்சிலிங் திட்டம்!!

இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்கள் தேர்வு குறித்த பயம் இல்லாமல் தெளிவாக தேர்வு ஹாலுக்கு செல்ல முடிகிறதுஎன்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த கவுன்சிலிங்கை பயிற்சி பெற்ற கவுன்சிலர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி முதல்வர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் இந்த கவுன்சிலிங்கை இலவசமாக இதுவரை வழங்கி வந்துள்ளனர். தொலைபேசி மூலமாகவும் இந்த கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று மொத்தம் 76 கவுன்சிலர்கள் மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்கி வருகின்றனர். இதில் 60 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நேபாளம், ஜப்பான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 16 பேரும் இந்த கவுன்சிலிங்கை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

English summary
With exams knocking on the doors, the pre-examination counselling for students of the Central Board of Secondary Education (CBSE) -affiliated schools and their parents began at the beginning of this month and will continue up to April 22. This is the 19th consecutive year that CBSE will provide psychological counselling services to students at the time of preparation as well as during the examinations to overcome exam-related stress. The CBSE annual counselling is an outreach programme, designed to cater to the heterogeneity of students’ population and geographical spread. Multiple modes of communication such as telephonic counselling, question-answer columns in newspapers and online counselling through CBSE website are used to reach out to the students during this phase.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia