வெளியானது சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

Posted By:

சென்னை: சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சரியாக நண்பகல் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ முறையில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள், தொலைபேசியிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியானது சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

அதன்படி, 24300699 (டெல்லி), மற்ற பகுதிகளில் 011-24300699 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

எம்.டி.என்.எல் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 28127030 (டெல்லி), நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 011-28127030 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.வி.ஆர்.எஸ் முறைப்படியும் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

English summary
CBSE plus 2 examinations released at 12 ‘o’ clock, students can know the result by mobile, sms, online.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia