மாப்பு வச்சுடாங்கடா ஆப்பு....... கிரேஸ் மார்க்குகளை அகற்ற...... மத்திய கல்வி வாரியம் முடிவு...!

Posted By:

சென்னை : தேர்வுகளில் வழங்கப்படும் கருணை மதிப்பெண்களை அகற்ற வேண்டும் என்கிற முக்கிய முடிவு பள்ளி கல்விச் செயலாளர் அனில் ஸ்வர்புப்பின் தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மத்திய கல்வி வாரியம் மற்றும் இதர 31 பள்ளி வாரியங்களும் இணைந்து மாணவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண்கள் எனப்படும் கருணை வழங்குவதை அகற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளன.

தேர்வில் கேட்கப்படும் கடுமையான கேள்விகளை ஈடுகட்டும் விதத்தில் சில பாடங்களில் மாணவ மாணவியர்களுக்கு பொதுவாக 15% கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

மாப்பு வச்சுடாங்கடா ஆப்பு....... கிரேஸ் மார்க்குகளை அகற்ற...... மத்திய கல்வி வாரியம் முடிவு...!

மேலும் தேர்வுத்தாள் திருத்தும் போது மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஓரிரு மார்க்குகள் தேவைப்படும் நிலையில் இருக்கும் போது அங்க கிரேஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மார்க்குகள் அவர்கள் மார்க்ஷீட்டிலும் வெளியிடப்படும்.

ஆனால் அவ்வாறு வழங்கப்படும் கிரேஸ் மார்க்குகளை அகற்ற வேண்டும் என்ற கொள்கையை மத்திய கல்வி வாரியம் வலியுறுத்துகிறது. இவ்வாறு செய்வதால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்.

படித்து எழுதியவற்றிற்கு மட்டும்தான் மதிப்பெண் வழங்கப்படும். கிரேஸ் மார்க் போடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் அனைத்து பள்ளி வாரியங்களிடமும் வலியுறுத்துகிறது.

ஓபன் ஸ்கூல் தேசிய நிறுவனம், மற்றும் உத்தரப் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பள்ளி கல்விச் செயலாளர் அனில் ஸ்வர்புப்பின் தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைத்து பாடசாலைக் குழுக்களும் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மாணவர்களின் கல்வித்தரம் உயராது. மேலும் மாணவர்கள் இளங்கலை நுழைவுத் தேர்வில் குறைபாடுள்ளவர்களாக இருப்பார்கள் என மத்திய குழு விளக்கியது.

English summary
Extra marks will still be awarded to students who need to clear an exam, but these will be disclosed on their mark sheets.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia