35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்!

நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 40 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 35 வது இடத்தை பிடித்துள்ளது.

By Kani

நீட் நடைபெறுமா? நடைபெறாத போன்ற கேள்விகளுடன் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தமிழகத்தில் இருந்து 1,14,602 மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் இருந்து 1,14,602 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 45,336 பேர் மட்டுமே இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் 40% மட்டுமே. இதனால் தமிழகம் தேர்ச்சி சதவிகிதப் பட்டியலில் 35 வது இடத்தில் உள்ளது.

நீட் தேர்வில் தமிழகம் 35-வது இடம்!

அதிகமாக தேர்ச்சி பெற்றவர்கள்:

தேர்வு முடிவுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் 76,778 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கடுத்ததாக கேரளாவில் 72,682 பேரும், மாகராஷ்டிராவில் 70,184 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவிகிதம்:

தேர்ச்சி விகிதத்தில் 74% பெற்று ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 79,057 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 58,738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக தில்லி 74 சதவிகிதமும். ஹரியானா 73, ஆந்திரபிரதேசம் 73, சண்டிகர் 72 சதவிகிதங்களை பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் 114602 பேர் தேர்வு எழுதியதில் 45336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்த தேர்ச்சி விகிதத்தில் 40 சதவிதம் மட்டுமே.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 120000 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 114602 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE NEET result 2018 declared: Highlights
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+