வருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

By Saba

மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாக இருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ

இருப்பினும், மருத்துவ ரீதியாக சிகிச்சை பெறும் மாணவர், தாய், தந்தை உயிரிழப்பு, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றள் உள்ளிட்ட மாணவர்களுக்கு விதி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வருகைப் பதிவு குறைவு

வருகைப் பதிவு குறைவு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2018- 2019ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், பள்ளிக்கு போதிய நாட்கள் வராமல், குறைவாக வருகை தந்த மாணவ, மாணவிகளே சிபிஎஸ்இ தேர்வுகளில் மோசமாக செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு குறைவாக வருகை தரும் மாணவர்களைச் கட்டுப்படுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு விதிமுறை

சிபிஎஸ்இ தேர்வு விதிமுறை

தேர்வு விதிமுறை 13-இன்படி சிபிஎஸ்இ-யில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வருகைப்பதிவு அவசியம். அதே சமயத்தில் விதி 14-இன் கீழ் வருகைப்பதிவு எத்தனை சதவிகிமம் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி அளிப்பது என்பதையும், எந்த அடிப்படையில் பரிசீலிக்கப் போகிறோம் என்பதையும் தீர்மானிக்க முடிவும்.

முறையான ஆவணங்களை அளிப்பதில்லை:-

முறையான ஆவணங்களை அளிப்பதில்லை:-

பெரும்பாலும் மாணவர்கள், பெற்றோர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. வருகைப் பதிவேட்டில் ஏதேனும் விலக்கு தேவையான பட்சத்தில் மாணவர்கள் உரிய ஆவணங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு யாரும் அளிப்பதில்லை. அதேபோன்று வருகைப் பதிவேட்டில் சிக்கல் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் சிபிஎஸ்இ வாரியத்துக்கும் பள்ளிகள் அனுப்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

நிலையான விதிகள்

நிலையான விதிகள்

மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கும் குறைவாக வருகை தந்தால் அதைச் சரிசெய்வதற்காக சிபிஎஸ்இ வாரியம் நிலையான விதிகளை பள்ளிகள், மாணவர்கள், பெற்றோருக்காக இணக்கமாக உருவாக்கி இருக்கிறது. இதன்படி, மாணவர்கள் வருகை குறித்த விவரங்களை அந்தந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

விதிவிலக்குகளும் உண்டு

விதிவிலக்குகளும் உண்டு

இந்த விதிமுறைகளில் சில விதிவிலக்குகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதாவது, உடல்நிலை குறைவு, நோய் காரணமாக சிகிச்சை பெறும் மாணவர், தாய், தந்தை உயிரிழப்பு போன்ற இயற்கை காரணங்கள், தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு விலக்குப் பெறும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து சான்றுடன் கடிதம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கடிதம் பெறுவதோடு பள்ளியின் பரிந்துரைக் கடிதம் ஆகியவை கட்டாயம்.

மண்டல அலுவலகங்களுக்கு:

மண்டல அலுவலகங்களுக்கு:

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 7-ஆம் தேதிக்குள் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்த சான்றுகளை சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ்கள், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்து அதை தெரிவித்தால், குறித்த நேரத்துக்குள் பள்ளிகள் பதில் அளித்து, ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE mandates schools to submit students’ attendance report to board
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+