சிபிஎஸ்இ தேர்வு: படித்ததை நினைவுபடுத்த மாணவர்களுக்கு 6 சூப்பர் டிப்ஸ்!!

சென்னை: படித்ததை நினைவுப்படுத்திக் கொள்ளவும், தேர்வை செம்மையாக எழுதவும் 6 சூப்பர் டிப்ஸ்கள் மாணவ, மாணவிகளுக்காக இங்கு வழங்கப்படுகின்றன.

தேர்வுக்காக மாணவ, மாணவிகள் ஆண்டு முழுவதும் படித்து நினைவில் வைத்துக் கொள்கின்றனர். தேர்வு நேரத்தில் பாடங்களை ரிவிஷன் செய்வதையும் அவர்கள் வழக்கமாகக் கொள்கின்றனர்.

ரிவிஷன் செய்வதற்காக இங்கு 6 சூப்பர் டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இதன்மூலம் பாடங்களை ரிவிஷன் செய்வது எளிதாகும். அதன்மூலம் தேர்வை சிறப்பாகவும், அருமையாகவும் எழுத முடியும். இதோ அந்த சூப்பர் டிப்ஸ்கள்....

சிபிஎஸ்இ தேர்வு: படித்ததை நினைவுபடுத்த மாணவர்களுக்கு 6 சூப்பர் டிப்ஸ்!!

டிப்ஸ் 1

ரிவிஷன் செய்யும் இந்தந்த பாடங்களை இத்தனை மணி நேரம் ரிவிஷன் செய்யவேண்டும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அனைத்து பாடங்களுக்கு ரிவிஷனுக்கு நேரமிருக்கிறதா எனக் கணக்கிட்டு அதற்கேற்ப நேரத்தை ஒதுக்கவேண்டும். இதற்காக தனியாக கால அட்டவணையைத் தயாரித்துக் கொள்ளலாம்.

டிப்ஸ் 2

கடைசி நேரத்தில் பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் கடைசி நேரத்தில் படிக்கும் புதியத் திட்டம் படிப்பதைத் தொடங்கக்கூடாது. அதாவது ஏற்கெனவே படித்த முறையைத் தான் பின்பற்றவேண்டும். புதிய முறை கூடவே கூடாது.

டிப்ஸ்3

ரிவிஷன் செய்யும் பாடங்களின் டாப்பிக்கை மனதில் கொள்ளவேண்டும். தேர்வுக்காக எந்த டாப்பிக்கைப் படித்தோமோ அதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முக்கியமான டாப்பிக்கை மனதில் தேர்வு செய்துகொண்டு படிக்கவேண்டும். மேலும் பழை வினாத்தாள்களில் உள்ள வினாக்களைத் தேர்வு செய்து படிக்கலாம்.

டிப்ஸ் 4

ஏற்கெனவே உள்ள வினாத்தாள்களில் உள்ள வினாக்களுக்கு பதில் எழுதிப் பார்க்கலாம். இதன்மூலம் நீங்கள் என்ன படித்தீர்கள் என்பது தெளிவாக விளங்கிவிடும். இதைப் பார்க்கும்போது நாம் தேர்வுக்கு எவ்வாறு தயாராகி இருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். விடுபட்ட பாடங்களை படிக்கவும் முடியும்.

டிப்ஸ் 5

நீங்கள் எழுதும் வேகம் என்ன என்பதைத் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். எழுதும் வேகம் குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்த முயற்சிக்கவேண்டும். விடைத்தாள்களில் சீரான கையெழுத்தை நாம் பின்பற்றவேண்டும். அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் தருதல் அவசியம்.

டிப்ஸ் 6

படிக்கிறோம், ரிவிஷன் செய்கிறோம் என்று இரவுகளில் தூங்காமல் இருக்கக்கூடாது. நன்றாகத் தூங்கும்போது மனது அமைதியாக இருக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும். நாம் படித்தது மூளையில் தங்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும்போது தேர்வையும் நாம் சிறப்பாக எழுத முடியும்.

இதைப் பின்பற்றும்போது தேர்வுக்குத் தயாராவது, ரிவிஷன் செய்வது மாணவ, மாணவிகளுக்கு எளிதாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Revision, an important aspect of reading can be of major saviour if students have proper plan while having a last minute revision. Careerindia has listed out few last minute tips for CBSE students to destress from Board exam blues. Students appearing for exams can read out the following tips to ensure success in the upcoming exam. So keep focused on revision and rest comfortably.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X