ஒழுங்கா விதிகளை பின்பற்றுங்க இல்லனா அவ்வளவுதான்...... 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நோட்டீஸ்

அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாமல், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட 13 பள்ளிகளை சி.பி.எஸ்.இ கண்டுபிடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்திலும் ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 600 பள்ளிகளும், நாடு முழுவதும் 18 ஆயிரம் பள்ளிகளும் செயல்படுகின்றன.

ஒழுங்கா விதிகளை பின்பற்றுங்க இல்லனா அவ்வளவுதான்...... 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நோட்டீஸ்

மேலும் பல பள்ளிகள் மெட்ரிக்கில் இருந்து சி.பி.எஸ்.இக்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றன. இப்படி மாறுகின்ற பள்ளிகள் கட்டுபாடின்றி அதிக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சிபிஎஸ்இ திடீர் ஆய்வு

அதிகக் கட்டணம் வசூலிப்பதைக்குறித்து சி.பி.எஸ்.இ வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும் சில பள்ளிகளில் திடீரென ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது பல்வேறு தில்லுமுல்லு நடந்திருப்பது தெரியவந்தது.

அங்கீகாரம் ரத்து எச்சரிக்கை

தமிழகத்தில் திண்டிவனத்தில் உள்ள தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட 13 பள்ளிகள் விதிமுறைகளை மீறி நடந்துள்ளது. தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்ட அந்த 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் சரியான பதில் தராவிட்டால், சி.பி.எஸ்.இ. வாரியம் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதி இல்லை

பல பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர், நுாலகர், ஆய்வகப் பணியாளர் இல்லை. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை. ஆய்வகம், நூலகம் போன்ற உட்கட்டமைப்பு வசதி இல்லை. மாணவர்களுக்கு போதிய பாதுபாப்பு வசதி இல்லை. பள்ளி அமைந்திருக்கும் நிலம் இரண்டு பிரிவாக பிரிந்து உள்ளது.

இலவச மாணவர் சேர்க்கை இல்லை

ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு விதிகளின்படி, ஊதியம் வழங்கப்படவில்லை, ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக, சி.பி.எஸ்.இக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை.

தில்லு முல்லு

சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று, பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். போதிய விளையாட்டு மைதானம் இல்லை; தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள் செய்யவில்லை. இது போன்று பல தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.

13 பள்ளிகள்

1. டிபிஎஸ் மதுரா சாலை, புது தில்லி, 2. டிபிஎஸ் ஆர் கே புரம், புது தில்லி, 3. வெள்ளி ஓக் பள்ளி, அல்வர், ராஜஸ்தான், 4. டெல்லி பப்ளிக் பள்ளி, நீல் பேட் கிராசிங், போபால், மத்தியப் பிரதேசம் அருகில் உள்ளது 5. தூண்கள் பொது பள்ளி, கோரக்பூர், மேல், 6. ரஜினி பப்ளிக் ஸ்கூல், புளந்த்ஷாஹர், அப், 7. சர் சையட் பப்ளிக் பள்ளி, வாரணாசி, அப், 8. வாரணாசி, பால் நிகிதான் ஜூனியர் உயர்நிலை பள்ளி, 9. நூருல் ஹுடா ஆங்கில ஊடகம் பள்ளி, ஃபதேபூர், அப், 10. கிங்ஸ் என் குயின்ஸ் உலக பள்ளி, கான்பூர், அப், 11. தாகூர் மூத்த மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம், தமிழ்நாடு, 12. மோதோஷி காஷீபன் வர்ல்லால் சர்வதேச வித்யாலயா, மும்பை, 13. மார்கடேஷன் சென்ட்ரல் ஸ்கூல், இளக்கால், கர்நாடகா ஆகிய 13 பள்ளிகள் தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு இருப்பதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Central Board of Secondary Education (CBSE) in a fresh notice has issued a show cause notice to few of its affiliated schools on the official website, the link for which is cbse.nic.in According to CBSE sources, more schools are likely to be served notice for violations of various affiliation rules of the Board.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X