சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை அதன் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பட்டியல் இன மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான தேர்வு க

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை அதன் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பட்டியல் இன மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்

மேலும், மேலே குறிப்பிட்ட பிரிவினர்களுக்குக் கூடுதல் பாடத்திற்கு தேர்வு கட்டணம் முந்தைய காலங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது, கூடுதல் பாடத்துக்கு தலா ரூ.300 செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கான பதிவுகள்

தேர்விற்கான பதிவுகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 9ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும். அதேப் போன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்றால் 11ஆம் வகுப்பிலேயே பதிவு செய்தல் அவசியம். அவ்வாறு பதிவு செய்வதற்கான தேர்வுக் கட்டணத்தை தற்போது சிபிஎஸ்இ மாற்றியுள்ளது.

எஸ்சி., எஸ்டி., பிரிவினர்களுக்கு 24 மடங்கு உயர்வு

எஸ்சி., எஸ்டி., பிரிவினர்களுக்கு 24 மடங்கு உயர்வு

இதில் எஸ்சி., எஸ்டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் 24 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2 மடங்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான கட்டண உயர்வு

அதிரடியான கட்டண உயர்வு

ஏற்கெனவே உள்ள கட்டணத்தின் அடிப்படையில் பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு பதிவு செய்யத் தொடங்கியுள்ளன. இதனால், பதிவு செய்த மாணவர்களிடம் புதிய கட்டணம் அறிவிப்புக்கு ஏற்றவாறு மீதத் தொகையையும் சிபிஎஸ்இ பள்ளிகள் வசூலிக்க முடிவு செய்துள்ளன.

50-யில் இருந்து 1200 ரூபாய் உயர்வு

50-யில் இருந்து 1200 ரூபாய் உயர்வு

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான கட்டணம் 50 ரூபாயாக இருந்தது. தற்போது அது 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 750 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 1500 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் பாடத்திற்கு 300 ரூபாய்

கூடுதல் பாடத்திற்கு 300 ரூபாய்

மேலும், 12ஆம் வகுப்பில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட கூடுதல் பாடங்களுக்கு விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படவில்லை. இனி அவர்கள் ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கும் 300 ரூபாய் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் ஏற்கெனவே கூடுதல் பாடத்துக்கு 150 ரூபாய் வீதம் செலுத்திய நிலையில் தற்போது இக்கட்டணம் 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல 12ஆம் வகுப்பில் கூடுதல் பாடத்துக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 பாடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்

5 பாடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்

அதே போன்று, சிபிஎஸ்இ பள்ளிகளில் இதற்கு முன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக பதிவு செய்வதற்கான கட்டணம் 5 பாடங்களுக்கு 5000 ரூபாய் என இருந்தது. தற்போது, 5 பாடங்களுக்கு 10,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடிபெயர்வுக் கட்டணமும் 150 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE hikes board exam fees for SC/ST pupils by 24 times, general category to pay double
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+