இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் தற்போது பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது கொரோனா உயிர்க்கொல்லி கிருமி. தற்போது, இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அரசாங்கம் சார்பில் இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












