வரும் செப்டம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!!

Posted By:

புதுடெல்லி: வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) நடைபெறவுள்ளது என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 18-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும். இந்த த் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக நடத்தத் தகுதியுடையவராவர்.

இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் குறைந்தது 12-ம் வகுப்பு படித்திருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இது 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்களுக்கானது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர் படிப்புக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஆசிரியர் டிப்ளமோவையும் முடித்திருக்கவேண்டும்.

தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத் பள்ளிகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றத் தகுதி பெறுவர்.

அரசு மானியம் பெறாத பள்ளிகளிலும் அவர்கள் பணியாற்ற முடியும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற cbse.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Examination date for the Central Teacher Eligibility Test (CTET) September 2016 has been released by the Central Board of Secondary Education (CBSE). The exam is scheduled to be held on September 18. Eligibility Criteria: The minimum eligibility criteria to appear for the test is as follows: Minimum qualifications for primary stage (Classes 1 to 5): Candidates applying for this post should have acquired a senior secondary certificate (or its equivalent), having obtained at least 50 percent marks The candidates must have completed or should be appearing in the final year of 2-year diploma in elementary education Minimum Qualifications for Elementary Stage (Classes 6 to 8): Candidates should have completed graduation. Also, they should have passed or should be appearing in the final year of two-year diploma in Elementary Education For more details on the eligibility criteria, candidates are advised to visit the official website

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia