மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற அரிய வாய்ப்பு!!

Posted By:

சென்னை:மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்வதற்கான தகுதித் தேர்வை எழுதுவதன் மூலம் அந்தப் பள்ளிகளில் பணியாற்ற அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற அரிய வாய்ப்பு!!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan), நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (Central Teacher Eligibility Test(CTET) வரும் செப்டம்பர் தேதியில் நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான சிபிஎஸ்இ(Central Board of Secondary Education) இத்தேர்வை நடத்துகிறது.

மத்திய அரசு பள்ளிகளில் தவிர சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் CTET தேர்வு பொருந்தும்.

* CTET தேர்வு 2 தாள்களை கொண்டதாகும்.

தாள் - 1 ல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.

தாள் - II ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு போன்ற இரு பிரிவுகளிலும் பணிபுரிய விரும்புபவர்கள் இருபகுதி தேர்வு தாள்களிலும் (தாள் I மற்றும் தாள் II) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்வுக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300-ம் கட்டணமாக பெறப்படும்..

தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000-ம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் வழி டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது சலானைப் பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயருக்கு CBSE கணக்குக்கு Syndicate Bank, HDFC வங்கியில் செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 20-ம் தேதி தேர்வுகள் நடைபெறும். இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆகும்.

மேலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 20 ஆகும்.

மேலும் இதுதொடர்பான முழுமையான விவரங்களைப் பெற www.ctet.nic.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
In a notification, the CBSE has informed that the next Central Teacher Eligibility Test (CTET) will be conducted on 20 September, 2015. This is the second test being held this year. The first CTET in 2015 was held on 22 February. The Central Teacher Eligibility Test (CTET) is conducted for those eligible for appointment as a school teacher for classes I to VIII. Applicants must note that qualifying in the CTET is just one of the eligibility criteria for appointment/ recruitment as a teacher.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia