சிபிஎஸ்சிஇ மாணவர்களே.. பொருளியலில் அதிக மார்க் வேண்டுமா.. இதோ சுடச் சுட டிப்ஸ்

Posted By:

சென்னை : பொருளியல் பாடம் மிகவும் சவலான மற்றும் சுவாரஸ்யமான பாடமாகும். ஆர்ட்ஸ் & காமஸ் மாணவர்களுக்கு பொருளியல் மிகவும் முக்கியமானப் பாடமாகும். இதில் அதிக மதிப்பெண் பெறுவது அவசியமான ஒன்றாகும்.

அதிக மதிப்பெண் எடுக்க கடின உழைப்பு கட்டாயம் வேண்டும். பாடங்களை விளங்கிக் கொண்டு படிக்க வேண்டும். மேலும் அனைத்துப் பாடங்களிலும் உள்ள கோட்பாடுகள் மற்றும் கணக்குகளை புரிந்து கொண்டு தெளிவாகப் படிக்கவும். சிறு முயற்சி, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது போன்றவை கண்டிப்பாக நீங்கள் அதிகம் மதிப்பெண் பெற உதவும்.

சிபிஎஸ்சிஇ மாணவர்களே.. பொருளியலில் அதிக மார்க் வேண்டுமா.. இதோ சுடச் சுட டிப்ஸ்

மாணவர்களே தேர்வு மிகவும் நெருங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் நீங்கள் விரைவாக தயாராக வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் நீங்கள் அதி மதிப்பெண்கள் பெற உதவும்.

1 தேர்வு நெருங்கி விட்டது. நீங்கள் முழுக் குறிப்புகளையும் மறு ஆய்வு செய்ய அதிக நேரம் இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய குறிப்புகள் மற்றும் அத்துடன் கூடிய விளக்கப்படங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு அனைத்து நேரங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்

2 வரையறைகள் மற்றும் புள்ளி விவரங்களை மனப்பாடம் செய்து பாருங்கள். பாடங்களைப் படிக்கும் போது சத்தமா படியுங்கள். அது உங்கள் கவனச் சிதைவைக் குறைக்கும்.

3 படிப்பதற்கு என்று ஒரு இடத்தை நியமனம் செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு வசதியாகவும் அமைதியாகவும் உள்ளவாறு நியமனம் செய்து கொள்ளுங்கள். தேர்விற்கு படிப்பதற்காக உங்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும் போது நீங்கள் பக்கத்திலுள்ள கோவில் அல்லது பூங்கா போன்ற அமைதியான இடங்களுக்குச் சென்று உங்கள் நண்பர்களுடன் குழுவாகச் சேர்ந்துப் படிக்கலாம்.

4 எண்களைப் பயன்படுத்தி எழுதும் கேள்விகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்களில் ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டுவிட்டாலும் அது முற்றிலும் தவறாக முடிந்து விடும். கணித அடிப்படையில் வரும் கேள்விகள் மற்றும் புள்ளி விவரங்களைப் பற்றி எழுதும் போது கவனம் அதிகம் தேவை.

5 மைக்ரோஎக்கனாமிக்ஸ் கணிதக்கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட பாடப் பகுதியாகும். இதிலுள்ள சந்தேகங்களை நீங்கள் தேர்வுக்கு முன்னதாகவே தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆசிரியரிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக மறுஆய்வு நேரத்தை ஒதுக்குங்கள். அதாவது ரிவிசன் நேரத்தினை ஒதுக்கி மேலும் தெளிவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

6 சூத்திரங்கள், புள்ளி விபரங்கள் மற்றும் விளக்க உரைகளை மீண்டும் மீண்டும் நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்லது. உங்கள் வேகத்தையும் துல்லியத் தன்மையையும் அதிகரிக்கும்.

7 மைக்ரோஎக்கனாமிக்ஸ் பாடத்தைப் பொறுத்த வரை பாப்புத்தகத்தில் உள்ள பாடங்களை நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டியது அவசியம்தான். அதே நேரம் மேலும் செய்தித்தாள்களில் அவ்வப்போது அரசு வெளியிடும் புதிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப் பற்றிய செய்திகளையும் படித்துத் தெரிந்து கொள்ளுவது நல்லது.

8 என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ மாதிரி வினாத்தாள்களை நீங்கள் சால்வ் பண்ணிப் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு ஐடியாவைக் கொடுக்கும். தேர்வின் போது நேரம் மேலாண்மையைக் கையாளுவது எளிதாகி விடும்.

9 இறுதித் தேர்விற்கு முன் நீங்கள் குறைந்தது இருமுறையாவது அனைத்துப் பாடங்களையும் ரிவிசன் விட வேண்டும். மற்றும் முக்கியமானக் கருத்துக்கள் மற்றும் சூத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள்.

10 எக்கனாமிக்ஸ் தியரி பேப்பர்களில் மிகவும் முக்கியமான பேப்பராகும். நீங்கள் நன்கு பயிற்சி செய்து விட்டு எழுதும் போது அது உங்களின் வேகத்தை அதிகரிக்கும். அதிக மதிப் பெண்களை நீங்கள் பெற வழிவகுக்கும்.

நன்குப் படித்து நல்மதிப்பெண்கள் வாங்க நல்வாழ்த்துக்கள்.

English summary
Economics is a challenging and interesting subject. The subject is considered as one of the important subjects for the Arts and Commerce students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia