மத்திய இடைநிலை கல்வி வாாியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவா்களுக்கு 12ஆம் வகுப்பு தோ்வு கடந்த மாா்ச் மாதம் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தோ்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதியிருந்தனா்.

தமிழ்நாடு, புதுச்சோி, ஆந்திரா, கா்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 71 ஆயிரம் போ் தோ்வு எழுதினா். தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 மாணவா்கள் தோ்வு எழுதியிருந்தனா். இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதை www.cbse.examresults.net. www.cbseresults.nic.in மற்றும் www.Results.gov.in போன்ற இணையதள முகவரிகளில் பாா்த்து அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் சதவிகித 93.87 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தேர்ச்சி சதவிகித அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மண்டலங்கள்:
97.32 சதவிகித தேர்ச்சியை பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், சென்னை அடுத்த இடமும், தில்லி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications












