3 மணி நேரமே படித்து 99.6 சதவீத மதிப்பெண் பெற்ற புணே மாணவி...!!

Posted By:

புணே: சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் புணேவைச் சேர்ந்த மாணவி முஸ்கான் வசந்தனி 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தினமும் 3 மணி நேரம் மட்டுமே படித்து இந்தச் சாதனையைச் செய்துள்ளதாக தன்னடகத்துடன் கூறுகிறார் முஸ்கான்.

இவர் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வருகிறார். படிப்புடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டு, கலை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் முஸ்கான்.

3 மணி நேரமே படித்து 99.6 சதவீத மதிப்பெண் பெற்ற புணே மாணவி...!!

ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே அவர் படிப்பாராம்.

இதுகுறித்து அவர் கூறுவதாவது....எனக்கு படிப்பு மிகவும் பிடிக்கும். இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெறுவேன் என்று நினைக்கவில்லை. தினமும் ஆசிரியர் நடத்தும் பாடங்களைப் படித்து விடுவேன். 3 மணி நேரம் படிப்பேன்.

மேலும் டியூஷன் என்று நான் எங்கு சென்றும் படிக்கவில்லை. எனது படிப்புக்கு எனது தாய் உறுதுணையாக இருந்தார். எனது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் ஆகியோர் எனது வெற்றிக்குக் காரணம்.

அவ்வளவுதான். பிளஸ்2விலும் அதிக மதிப்பெண் பெறவேண்டும். அதுதான் எனது ஆசை என்கிறார் முஸ்கான்.

English summary
Ask 16-year-old Muskaan Vasandani from Delhi Public School how she managed 99.6 per cent in her CBSE Std X exams and her answer is simple – a good balancing act between academics and art. Muskaan, who has been taking art classes for the last 10 years, used her art to de-stress during her exams and even preparations. Muskaan says she studied only for about 3-4 hours every day. “I didn’t even follow a rigid study plan. I also didn’t attend any extra tuition classes whatsoever,” says the school topper, while attributing her success to the help given to her by her mother as well her school teachers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia