நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடைந்தது.
இந்தத் தேர்வை மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். பத்தாம் வகுப்பு கணக்கு வினாத்தாள் வெளியானதாகச் சர்ச்சை எழுந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது டுவிட்டரில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தையும். சென்னை 97.37 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், அஜ்மீர் 91.86 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications












