CBSE: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட உள்ளார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட உள்ளார்.

CBSE: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும் வகையில் 30 சதவிகிதம் வரையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும், அதற்காக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு டிவிட்டரில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, அவர்களின் கருத்துகள் குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என சிபிஎஸ்இ நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியான பிறகு, தேர்வு அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cbse.nic.in/ என்னும் தளத்தில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE board Class 10, 12 exams 2021 date to be announced today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+