பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம்.. சி.பி.எஸ்.இ அறிவிப்பு

Posted By:

சென்னை: பள்ளிக் கூட வாகங்கனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படட்டு வருவதாலும் அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாலும் பள்ளி வாகனங்களில் கட்டாயம் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் சி.பி.எஸ்.இ வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று வடமாநிலத்தில் விபத்துக்குள்ளானது. அதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். அது அனைவரையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கிய சம்பம் ஆகும் எனவே சி,பி.எஸ்.இ வாரியம் பள்ளிக் கூட வானங்களில் கட்டாயம் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் அந்த கேமரா எப்பொழுதும் செயல்படும் நிலையிலேயே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம்.. சி.பி.எஸ்.இ அறிவிப்பு

பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்திற்கும் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்க வேண்டும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பளிச்சென்று பள்ளி வாகனம் என்று தெரிய வேண்டும் என்பதற்காக மஞ்சள் நிற பெயின்ட் மற்றும் பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வானம் என்று பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளது.

பஸ்ஸின் கதவுகள் நன்றாக மூடும் கதவுகளாக இருக்க வேண்டும். அறைகுறையாக கதவினை மூடி விட்டு வாகத்தை எடுக்கக் கூடாது.

பஸ் எந்தப் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கிறது எந்த இடத்தில் பஸ் இருக்கிறது என்பதைக் கண்டறியும் வண்ணம் அனைத்துப் பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும்.

மாணவர்கள் உட்காரும் சீட்கள் டேமேஜ் எதுவும் இல்லாத வண்ணம் அமைத்து இருக்கப்பட வேண்டும். ஆடுகின்ற சீட்டுகள் பஸ்ஸில் இருந்தால் அவைகள் உடனே அகற்றப்பட்டு சரிசெய்யப்பட வேண்டும்.

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் 2 தீயணைப்பு கருவிகளாவது இருக்க வேண்டும். அதனை பள்ளி நிர்வாகம் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாகனத்திலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பஸ்ஸை இயக்குவதற்கு தேவையான வேகக் கட்டுப்பாட்டுக் கருவியினை பொருத்த வேண்டும். அதற்கு மேல் வேகமாக பள்ளி வாகனத்தை ஓட்டக் கூடாது,

ஆபத்தான நேரம் மற்றும் அவசர நேரங்களில் மாணவர்கள் வெளியேறுவதற்கான கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பஸ்ஸிலும் தனி செல்போன் வசதியினை பள்ளி நிர்வாகம் செய்து தர வேண்டும். அதிலிருந்து அவசரக் காலங்களில் கண்டக்டர் அல்லது டிரைவர் தொடர்வு கொள்ள வேண்டும்.

அனைத்து பேருந்துகளிலும் அவசர கால முதலுதவி பெட்டி பொருத்தப் பட்டிருக்கப் பட வேண்டும்.

மாணவர்கள் தங்கள் பைகள் மற்றும் லஞ்ச் பைகளை பஸ்ஸில் வைப்பதற்குத் தேவையான இட வசதியும் ஒவ்வொரு பஸ்ஸிலும் செய்துத் தரப் பட வேண்டும்.

இவ்வாறு மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அத்தியாவசிய தேவைகளும் அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என சி,பி.எஸ்.இ வாரியம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்திருக்கிறது.

English summary
cbse board issued one circular that must be fixed with a CC tv camera in all scholl buses for students safety.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia