CBSE: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் நிலவி வந்தது.

CBSE: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட பள்ளிகள்

மூடப்பட்ட பள்ளிகள்

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்வுகள் ரத்து

தேர்வுகள் ரத்து

கொரோனா வீரியம் அதிகளவில் இருந்ததால், பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவதாகத் தமிழக அரசு அதிரடி உத்தரவை அறிவித்தது. பொதுத் தேர்வுகள் மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது.

சிபிஎஸ்இ தேர்வுகள்

சிபிஎஸ்இ தேர்வுகள்

தொடர்ந்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. முன்னதாக செய்முறைத் தேர்வுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பாடத்திட்டத்தில் மாற்றம்

பாடத்திட்டத்தில் மாற்றம்

இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் 30 சதவிகிதம் வரையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும், அதற்காகத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கடந்த கல்வி ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு

தொடர்ந்து, கடந்த கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருந்தார். அதில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே 4-ந்தேதி தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

9 முதல் 11 வரையில் ஆல்பாஸ்

9 முதல் 11 வரையில் ஆல்பாஸ்

இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளுக்கு பாதிப்பு

பொதுத் தேர்வுகளுக்கு பாதிப்பு

மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் நெருங்கி வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணாக தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 1ம் தேதியன்று ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு 12ம் வகுப்பிற்கான தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தற்போது, சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி வந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

கல்வி அமைச்சருக்கு கொரோனா

கல்வி அமைச்சருக்கு கொரோனா

இந்நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்தியக் கல்வியமைச்சர் பொக்ரியால் கொரோனா தொற்றின் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை.

பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மாணவர்களின் நலனைக் கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்நோய்த் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் மாணவர்களைத் தேர்வெழுத நிர்ப்பந்திக்கக் கூடாது. விரைவில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Board 2021: 12th CBSE Board Exam 2021 Cancelled, Prime Minister Modi's announcement
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+