சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை - வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்

Posted By:

சென்னை : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறையை சிபிஎஸ்இ வருகின்ற கல்வியாண்டில் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

பொதுத் தேர்வு

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு வரை 10ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களுக்கு பொது தேர்வும் சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓரே மதிப்பீட்டு முறை

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைப் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி அளவில் சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும் சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.

இரண்டு பருவ மதிப்பீடு

இரண்டு பருவத்துக்கும் தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மாத வாரியாகவும், 80 மதிப்பெண்களுக்கு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு அடிப்படையிலும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

சேர்மன் சுற்றறிக்கை

பள்ளிகளில் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையை கையாள்வதால், நாடு முழுவதும், ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஒரே மதிப்பீட்டு முறை இருந்தால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும், அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். இதுவே இந்த ஓரே மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து சிபிஎஸ்இ சேர்மன் ஆர்.கே.சதுர்வேதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

English summary
CBSE Chairman R.K. Chaturveti has Announced that will bring the same scoring system in the coming academic year for 6th std to 9th std students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia