மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியாயின. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வெளியாயின. இந்த தேர்வு முடிவுகளை, cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் அறியலாம். இதில் முதலிடத்தை திருவனந்தபுரம் மண்டலம் பிடித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் குஷியடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை நாடு முழுவதிலும் 16,21,224 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாகவே இருந்தது.
அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து , தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவச் செல்வங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 91.52% மாணவிகளும், 85.12% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, மாணவர்களைவிட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 24,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












