CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 11ம் வகுப்பு படித்து வெளியேறிய மாணவர்கள் தமிழக அரசு பாடத்திட்டத்தில் நேரடியாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதலாம் என ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 11ம் வகுப்பு படித்து வெளியேறிய மாணவர்கள் தமிழக அரசு பாடத்திட்டத்தில் நேரடியாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதலாம் என ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், வருடத்திற்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பலா், பல்வேறு காரணங்களுக்கான தமிழக பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு சோ்ந்து கல்வி மேற்கொள்கின்றனர். அவ்வாறு சேரும் மாணவர்கள் மாநில பாடத் திட்டத்திலும் 11ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினால் மட்டுமே 12ம் வகுப்பில் சேர்க்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11ம் வகுப்பு முடித்தவர்கள், நேரடியாக 12ம் வகுப்பில் சோ்ந்து பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கான அனுமதி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு தோ்ச்சி பெற்று, தற்போது மாநில பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவ- மாணவிகள், மேல்நிலை முதலாமாண்டு பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தோ்வை எழுதலாம்.

இதற்கு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். நேரடித் தனித் தேர்வர்களாக மேல்நிலைத் தோ்வு எழுதும் மாணவர்கள், மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதிய பின்னரே, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். நேரடித் தனித்தேர்வர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE: 11th standard students can directly attend 12th grade - Govt
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+