சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசிற்கு உட்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதனிடையே, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 13ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், ஜூலை 15ம் தேதியன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.
இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் cbse.nic.in அல்லது cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அதோடு, தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தேர்வுமுடிவுகள் அனுப்பப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இணைய வசதி இல்லாத மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை CBSE10 என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்புவதன் மூலம் குறுச்செய்தி வாயிலாக முடிவுகளை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












