சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு! இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியான நிலையில், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், திருவனந்தபுரம் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியான நிலையில், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், திருவனந்தபுரம் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு! இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளியின் 10ம் வகுப்பு பொதுத் ததேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றின் காரணமான சில பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே ரத்து செய்யப்பட்ட தேர்வுகளை தொடர்ந்து நடத்தமுடியாத நிலையில், அப்பாடங்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ-யின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 13ம் தேதியன்றும், பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்றும் (ஜூலை 15) வெளியிடப்பட்டது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது வெளியாகியுள்ள சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் நாடு முழுவதுமிருந்து திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டலம் வாரியாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் இதோ!

  • திருவனந்தபுரம் : 99.28 சதவிகிதம்
  • சென்னை : 98.95 சதவிகிதம்
  • பெங்களூரு : 98.23 சதவிகிதம்
  • புனே : 98.05 சதவிகிதம்
  • அஜ்மர் : 96.93 சதவிகிதம்
  • புவனேஷ்வர் : 93.20 சதவிகிதம்
  • போபால் : 92.86 சதவிகிதம்
  • சண்டிகர் : 91.83 சதவிகிதம்
  • பாட்னா : 90.69 சதவிகிதம்
  • டேராடூன் : 89.72 சதவிகிதம்
  • பிரக்யாராஜ் : 89.12 சதவிகிதம்
  • நொய்டா : 87.51 சதவிகிதம்
  • டெல்லி மேற்கு : 85.96 சதவிகிதம்
  • டெல்லி கிழக்கு : 85.79 சதவிகிதம்
  • கவுகாத்தி : 79.12 சதவிகிதம்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE 10th result 2020 declared: Trivandrum and Chennai region is top performer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X