சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்

Posted By:

சென்னை : சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 10ம் வகுப்பில் மாணவர்கள் இது வரை ஐந்துப் பாடங்களை பயின்று வருகின்றனர். சிபிஎஸ்இ ஆறாவதாக ஒரு புதியப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்தக் கல்வி ஆண்டு (2017- 2018) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ மர்ணவர்கள் மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பாடங்களை பயின்று வருகின்றனர். அடுத்தக் கல்வியாண்டில் இருந்து (2017-2018) ஆறாவதாக தொழில் கல்வி பாடம் ஒன்றினையும் சேர்த்துப் படிப்பார்கள்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்

தொழில்கல்விப் பாடத்தில் 13 வகையான பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் இந்த 13 வகையான பாடத்திட்டத்தில் ஒன்றினை கூடுதலாக எடுத்துப் படிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், டைனமிக் ஆப்ரீடெய்லிங், செக்யூரிட்டி, உணவு உற்பத்தி, மார்க்கெட்டிங், சேல்ஸ் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற 13 வகை படிப்பினை சிபிஎஸ்இ கூடுதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்கள் அறிவியல் கணிதம் சமூகஅறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்குப் பதிலாக விருப்பப்பாடம் பார்க்கப்படும். இனிமேல் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து மாணவர்கள் தொழில்கல்விப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

English summary
cbse head r.k. chaturvedi has announced that cbse 10th class curriculum change from the next academic year (2017-2018).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia