சிஏடி 2016 தேர்வு: பெங்களூரு ஐஐஎம் நடத்துகிறது..!!

Posted By:

பெங்களூரு: இந்த ஆண்டில் சிஏடி 2016 தேர்வை பெங்களூரிலுள்ள உயர்கல்வி நிறுவனமான ஐஐஎம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

சிஏடி 2016 தேர்வு: பெங்களூரு ஐஐஎம் நடத்துகிறது..!!

சிஏடி தேர்வுக் குழு கூட்டம் மே மாத இறுதியில் நடைபெறும். அப்போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை பெங்களூரு ஐஐஎம், நிர்வாகத்திடம், ஆமதாபாத் ஐஐஎம் நிர்வாகம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஐஎம் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சிஏடி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iimb.ernet.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

சிஏடி தேர்வு தொடர்பான அறிவிப்பு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று சிஏடி 2015 தேர்வுக் குழு உறுப்பினரும், பேராசிரியருமான தத்கட்டா பந்தோபாத்யாயா தெரிவித்தார்.

English summary
The Indian Institute of Management (IIM) Bangalore will be conducting the Common Admission Test (CAT) for the academic year 2016. As per the official reports from the CAT 2015 committee, IIM Bangalore is supposed to conduct CAT 2016 exam, and an official announcement in this regard is likely to be released by the end of May or early June. Confirming the news IIM Bangalore professor said, " It's true. IIM Bangalore will conduct the test. I have been hearing this for some time now."

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia