சேலத்தில் அடிப்படை வசதியின்றி தமிழக அரசின் டே கேர் செண்டர் மூளைவளர்ச்சி குன்றியோர்க்கான பள்ளி

Posted By:

சேலத்தில் அரசு நடத்தும் மாற்றுதிறனாளிகளுக்கான பள்ளி கேட்பாரற்று   எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி  அவல நிலையில் சேலம் டே கேர் செண்டர் . 
சேலம் அம்மா பேட்டையில் தமிழக அரசு நடத்தும் மாற்றுதிறனாளிகளுக்கான பள்ளி எந்த வித பராமரிப்புமின்றி நிர்கதியில் கிடக்கின்றது . சேலத்தில் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் பராமரிப்புக்கு ஒரு வருடம் முன்பு தமிழக அரசு சேலத்தில் தொடங்கிய டே கேர் செண்டர் எந்த வித வசதிகளும் இன்றி ஒரு வருட காலமாக மிகுந்த சிக்கலில் உள்ளது . மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளியில் மாணவர்கள் பயில்வது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை .

ஒருவருடகாலமாக கேட்பாரற்று எந்தவித அடிப்படை வதியுமற்ற சேலம் டே கேர் அரசு பள்ளி

தன்னார்வாளர்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் பெற்றுத்தர முன்வந்துள்ளனர் . பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் பெற்றுத்தர அதிக செலவு பிடிக்கும் மற்றும் அடிப்படை வசதிகள் கூட சரியாக பெறாமல் இன்னலுக்கு ஆளாகும் மாணவர்களின் நலன் கருதி அரசு இனிமேலாவது நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்

ஒருவருடகாலமாக கேட்பாரற்று எந்தவித அடிப்படை வதியுமற்ற சேலம் டே கேர் அரசு பள்ளி

இம்மாதிரி மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளில் தேவையான வசதிகள் இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகுகின்றனர் . தமிழக அரசு இதனை அறிந்து மாணவர்களின் வாழ்வுக்கு அடிப்படையான கல்வியை குறையின்றி வழங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும் .

English summary
here article mentioned about careless school of differently able students run by government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia