40 சதவீதம் மார்க் எடுக்கனும்?

வங்கி, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, பிற மாநிலத்தில் போய் தேர்வெழுதியவர்களுக்கு என்ன உபசரிப்பு இருந்தது என்பதை நாம் எப்போதும் மறக்க மாட்டோம்ல...! இந்த சம்பவம் எங்க நடந்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்பல...

அப்ப எல்லோரும் மனதில், நம்ம மாநிலத்திலும், பிற மாநிலத்தவர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாட்டங்களானு நீங்க எண்ணியது, இப்ப தான் கொஞ்ச, கொஞ்சமாக நிறைவேற போகுது.

தமிழில் தேர்ச்சி கட்டாயம்

அது என்னனு உங்களுக்கு தெரியுனுமா? வேறு ஒன்றும் இல்லை. அதாவது, தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பை, ஆகஸ்ட் 21ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக அரசு துறைகளில் பணி வாய்ப்பு பெற வேண்டும் எனில், தமிழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத்தும் விதத்தில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

155 காலிப் பணியிடங்கள்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என, மொத்தம் 155 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழில் தேர்ச்சி கட்டாயம்

தேர்ச்சி கட்டாயம்

இந்த தேர்வில், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதில், குறைந்தபட்சம் 40 % ( 20 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.

அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

கடைசி தேதி தெரியும்?

பகுதி ஆ பிரிவில், 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்திருக்கிறது வாரியம்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

என்ன சந்தோஷம் தானே....! நம்ம மாநிலத்தில் முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை நிச்சயம்....!
அதேநேரம் பிற மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை படித்து உள்ளே வரவும் வாய்ப்புள்ளது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாதுனா! நீங்க தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறனும்ங்கிறதை மறக்காதீங்க தேர்வர்களே...!

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Do you know who announced that the main answer sheet will be revised only if you get 20 marks in the Tamil exam?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+