சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்காக அழைக்கிறது கனரா வங்கி!!

Posted By:

சென்னை: கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 74 பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் 2016 ஜனவரி 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது கனரா வங்கியின் தலைமையகம். 1906-ல் மங்களூரு நகரில் இது தோற்றுவிக்கப்பட்டது. 5705 கிளைகளுடன் 9039 ஏடிஎம்களுடன் தற்போது பரந்து விரிந்த சாம்ராஜ்யமாக இயங்கி வருகிறது கனரா வங்கி.

சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்காக அழைக்கிறது கனரா வங்கி!!

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்ங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும்.

டெக்னிக்கல் ஃபீல்ட் ஆபிஸர், நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர், எகனாமிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

கல்வித் தகுதி, வயதுத் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.canarabank.com-ல் காணலாம்.

English summary
Canara Bank, a leading Public Sector Bank with Head Office in Bangalore and pan India presence invited applications for recruitment to the posts of Specialist Officers in JMGS-I & MMGS-II. The eligible candidates can apply online to the post through the prescribed format from 22 December 2015 to 12 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia