இந்திய கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்த வரும் பிரபல கனடா பேராசிரியர்கள்!!

Posted By:

புதுடெல்லி: இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்துவதற்காக கனடாவைச் சேர்ந்த பிரபல பேராசிரியர்கள் இந்தியா வரவுள்ளனர்.

இதுதொடர்பான ஒப்பந்தம் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையே கையெழுத்தானது.

இந்திய கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்த வரும் பிரபல கனடா பேராசிரியர்கள்!!

கனடாவுக்கு அண்மையில் பிரதமர் சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி அங்குள்ள பேராசிரியர்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு வந்து இந்திய மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரவுள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: கனடாவைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து பாடங்களை நடத்தவுள்ளனர். அவர்கள் 3 மாதம் முதல் 6 மாத காலம் இங்கு தங்கியிருந்து பாடங்களை நடத்துவதர். குளோபல் இனிஷியேட்டிவ் ஆஃப் அகாடமிக் நெட்வொர்க்ஸ் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரம் மேம்படும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்றார் அவர்.

English summary
India has invited Canadian faculty members to teach in the country's institutes of higher learning at short stretches, on Friday, April 1, 2016. During a bilateral meeting with his Canadian counterpart Justin Trudeau, Prime Minister Narendra Modi, on the sidelines of the Fourth Nuclear Summit, said that Canada had a surplus of human resource capital. "He said that Canadian professors and teachers, including retired faculty members, could consider coming to India during the harsh winter months in Canada and teaching at Indian universities for periods ranging from three to six months under the GIAN (Global Initiative of Academic Networks)," external affairs ministry spokesman Vikas Swarup said at a media briefing following the meeting, according to IANS.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia