நுழைவுத் தேர்வு அறிமுகம்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முடிவு!!

Posted By:

சென்னை: மாணவர் சேர்க்கைக்காக விரைவில் நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2016-17 கல்வியாண்டில் இந்தத் திட்டை அறிமுகம் செய்ய கேம்பிரிட்ஜ் முடிவு செய்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புபவர்கள் இனி நுழைவுத் தேர்வில் எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே படிப்பில் சேர முடியும். இதற்கு முன்பு 1980 வரை நுழைவுத் தேர்வு முறை இருந்தது. 1980-ல் நுழைவுத் தேர்வு முறை ஒழிக்கப்பட்டது. தற்போது இது மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு முறை உள்ளது. அதைத் தொடர்ந்தே கேம்பிரிட்ஜிலும் நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயக்குநர்(சேர்க்கை) டாக்டர் சாம் லூஸி தெரிவித்தார்.

English summary
The University of Cambridge re-introduces the written entrance test for admissions from the academic year 2017. Students who are willing to join the premier British institution will have to take the admission test along with the interview. The entrance exams at the Cambridge University was discontinued during the 1980's. The reintroduction of the entrance test for admission process will make the Cambridge University in line with the Oxford University.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia